பழங்களை தினசரி உணவில் சேர்ப்பது மிகவும் முக்கியமானது. அவை உடலுக்கு தேவையான வைட்டமின்கள், நார்ச்சத்து, மற்றும் நீர்ச்சத்துக்களை வழங்குகின்றன. குறிப்பாக, பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது. அந்த நேரத்தில் செரிமான மண்டலம் முழு சக்தியுடன் செயல்படுவதால், பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலால் முழுமையாக உறிஞ்சப்படுகின்றன. இதனால் நாள் முழுவதும் உங்களுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும்.

பழங்களை உணவுக்கு முன் சாப்பிடுவது நல்லது என்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். உணவுக்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. அது உடலில் செரிமான செயல்பாட்டை மேம்படுத்தி, உணவுகளுடன் மோதாமல் சரியாக செயல்பட உதவுகிறது. உணவுக்குப் பிறகு உடனடியாக பழங்களை சாப்பிடக்கூடாது. இது வயிற்று மந்தம், புளிப்பு மற்றும் செரிமான கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அதுவும் குறிப்பாக புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளுக்குப் பிறகு பழங்களை சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும். உணவுக்குப் பிறகு பழங்களை சாப்பிட வேண்டுமெனில், 2 மணி நேரம் இடைவெளி வைத்திருப்பது அவசியம். இந்த இடைவெளி பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்களை சரியாக உடலுக்கு வழங்கும். இல்லையெனில் அது உடலுக்குப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
மொத்தத்தில், பழங்களைச் சாப்பிடுவதற்கும் ஒரு நேரம் மற்றும் முறைமைகள் இருக்கின்றன. உணவுக்கு முன், அல்லது உணவுக்குப் பின் சரியான நேர இடைவெளியில் பழங்களை எடுத்துக்கொண்டால் தான் அதன் முழுப் பயனை பெற முடியும். பழங்களை உடல் உறிஞ்சும் வகையில் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமாகும்.