சென்னை: பத்திரிகைத்துறை, டெலிவிஷன், ரேடியோ மற்றும் இணைய ஊடகங்களில் பணிபுரியும் திறன்களை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் புதிய இதழியல் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. மாறி வரும் டிஜிட்டல் யுகத்தில் அடுத்த தலைமுறையை தயார் செய்யும் நோக்கில் சர்வதேச கல்வி நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய கல்வி நிறுவனத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நிறுவனை தொடங்கி வைத்தார். பின்னர், இதழியல் முதுநிலை பட்டய படிப்பில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற மாணவர்களுடன் அவர் உரையாடினார்.