மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆப்பரேஷன் சிந்தூர் இந்திய ராணுவத்தின் திறனை நிரூபித்ததாகவும், அதிலிருந்து நாடு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் சைபர் தாக்குதல்களை முறியடிப்பது என்றும் தெரிவித்தார்.

தொழில்நுட்ப வளர்ச்சி மிக வேகமாக முன்னேறி வரும் நிலையில், போர்கள் நிலம், கடல், வான்வெளி மட்டுமன்றி விண்வெளி மற்றும் சைபர் ஸ்பேஸிலும் விரிவடைகின்றன என்பதை ஆப்பரேஷன் சிந்தூர் வெளிப்படுத்தியதாக அவர் கூறினார். சைபர் பாதுகாப்பு உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது தவிர்க்க முடியாத தேவையாகும் என ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
இந்தியாவின் உள்நாட்டு ஆயுதங்கள் வெற்றியை ஆப்பரேஷன் சிந்தூர் நிரூபித்ததோடு, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள இந்தியா தன்னம்பிக்கையுடன் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்தியாவில் ஜெட் இன்ஜின் உற்பத்தி விரைவில் முன்னேற்றம் காணும் என்றும் குறிப்பிட்டார்.
புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் எதிர்பாராத சவால்களை சமாளிக்க நாடு தயாராக இருக்க வேண்டும் என்பதையும், சுயநம்பிக்கை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் இந்திய பாதுகாப்பின் தூண்களாக இருக்கும் என்பதையும் அமைச்சர் வலியுறுத்தினார்.