சுவையிலும் ஆரோக்கியத்திலும் தனி இடம் பெற்ற மசாலா பொருள் சீரகம். ரயித்தா, தயிர் வடை, பானிபூரி, ஜல்ஜீரா போன்ற உணவுகளில் சீரகம் தவறாமல் சேர்க்கப்படும். வறுத்தால் தீவிரமான கார சுவை தரும் இதன் விதைகள், தண்ணீரில் ஊறவைத்து குடிக்கும்போது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றன. இன்று கூட சீரக தண்ணீர் ஆரோக்கியத்தின் மறைவு ரகசியமாக கருதப்படுகிறது.

சீரக தண்ணீர் தயாரிப்பது மிக எளிது. ஒரு கிளாஸ் தண்ணீரில் 1–2 டீஸ்பூன் சீரகத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். விருப்பமிருந்தால் அந்த தண்ணீரை சற்று கொதிக்க வைத்து குடிக்கலாம். ஆனால், அதிகப்படியான அளவு உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடும் என்பதால் ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் போதுமானது. குறிப்பாக கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள் மற்றும் மருந்து உட்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்துவது நல்லது.
சீரக தண்ணீரின் நன்மைகள் பல. உடல் எடையை குறைக்க உதவுகிறது, பசியை கட்டுப்படுத்துகிறது. செரிமானத்தை மேம்படுத்தி வீக்கம், இரைப்பை சிக்கல்கள் குறைகிறது. உடலின் நச்சுகளை நீக்கி, மனஅழுத்தத்தை குறைத்து நல்ல தூக்கத்தையும் அளிக்கிறது. சருமம் பளபளப்பாக மாறுகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதுடன், இரும்புச் சத்தையும் வழங்குகிறது. இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கும் நிவாரணமாகிறது.
இந்த எளிய பானம் பல நாள்பட்ட நோய்களைத் தடுக்கவும், உடலுக்கு புத்துணர்ச்சி தரவும் உதவுகிறது. தினமும் ஒரு கிளாஸ் சீரக தண்ணீரை வாழ்க்கையில் சேர்த்துக் கொண்டால், இயற்கையான ஆரோக்கிய தீர்வை எளிதில் பெறலாம்.