பியூனஸ் அர்ஸ்: அர்ஜென்டினா தனது விசா விதிகளில் மாற்றம் செய்து, இந்திய சுற்றுலா பயணிகளுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதுவரை அர்ஜென்டினா செல்ல தனியாக விசா பெற வேண்டியிருந்த நிலையில், இனி அமெரிக்காவுக்கான செல்லுபடியாகும் விசா வைத்துள்ள இந்தியர்கள், தனியாக அர்ஜென்டினா விசா பெறாமல் அந்த நாட்டிற்குள் நுழைய முடியும்.

இந்த தகவலை அர்ஜென்டினா தூதர் மரியானோ காசினோ தெரிவித்துள்ளார். “அமெரிக்க விசா வைத்துள்ள இந்தியர்கள், அதை பயன்படுத்தியே அர்ஜென்டினாவுக்கு தாராளமாக வரலாம். இதன் மூலம் இந்திய சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
இந்த மாற்றம் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இருக்குமெனவும், கலாசார மற்றும் வர்த்தக உறவுகள் மேலும் வலுவடையும் எனவும் தூதர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், இந்திய சுற்றுலா பயணிகளுக்கு தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா பயணம் மிகவும் எளிதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.