சுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்தில் நடந்த டயமண்ட் லீக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 2ம் இடம் பிடித்தார்.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டயமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியரும், நடப்பு உலக சாம்பியனுமான நீரஜ் சோப்ரா இரண்டாமிடத்தையே பிடிக்க முடிந்தது.
சூரிச்சின் லெட்ஸிக்ரண்ட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளில் நீரஜ் சோப்ரா தொடர்ந்து மூன்று முறை தவறுகளைச் செய்ததால் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91 புள்ளி 37 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார். 85 புள்ளி 01 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா 2ம் இடத்தைப் பிடித்தார்.