மட்டும் 14 வயதிலேயே டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. ஜெய்ப்பூரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 38 பந்துகளில் 101 ரன்கள் குவித்து, இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதன் மூலம் அவர் ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம் அடித்தவராகவும் பெயர் பெற்றார்.

கடந்த ஆண்டு 13 வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.1.1 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். அதன்பின், 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 7 போட்டிகளில் 252 ரன்கள் குவித்து தனது திறமையை நிரூபித்தார். அவரது தாக்குதல்மிகு பேட்டிங் திறமை ரசிகர்களை மட்டுமல்லாமல், முன்னாள் வீரர்களையும் கவர்ந்துள்ளது.
ஐபிஎல் தொடருக்குப் பிறகு இங்கிலாந்து சென்ற வைபவ், அங்கு யு-19 ஒருநாள் போட்டியில் 52 பந்துகளில் சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். மிக வேகமான சதம் எனப் பதிவு செய்யப்பட்ட இந்த சாதனை, அவரது திறமையை உலகளவில் அங்கீகரிக்கச் செய்தது. ரிஷப் பந்த், ரிங்கு சிங் போன்றோர் போல், வைபவ் சூர்யவன்ஷியும் நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் கிடைக்கும் திறமைசாலி என்று சுரேஷ் ரெய்னா பாராட்டினார்.
அயுஷ் மாத்ரே மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரில் யார் முதலில் இந்திய அணியில் விளையாடுவார்கள் என்று கேட்கப்பட்டபோது, ரெய்னா தயக்கமின்றி வைபவின் பெயரையே கூறினார். இதன் மூலம், கிரிக்கெட் உலகின் எதிர்கால நட்சத்திரங்களில் ஒருவராக அவர் ஏற்கனவே தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.