டெல்லி: அமெரிக்காவின் கடுமையான அழுத்தங்களை இந்தியா ஏற்க மறுத்துவிட்டதாகவும், அதன் காரணமாக நடந்துவரும் பேச்சுவார்த்தையில் இருந்து இந்தியா விலகி வெளியேறிவிட்டதாகவும், முன்னாள் நிதித்துறை செயலாளர் சுபாஷ் கார்க் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை அடக்க முயன்ற அமெரிக்காவின் வரி அழுத்தங்கள் காரணமாக, இந்தியா உறுதியான நிலைப்பாடு எடுத்ததாக அவர் குறிப்பிட்டார். இதனால் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டு இந்தியா வெளியேறியது முக்கியமான தூதரக நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இதன் மூலம் இந்தியாவின் பல முக்கிய ஏற்றுமதி துறைகள் நேரடியாக பாதிக்கப்படுகின்றன.
மேலும், ரஷ்ய எண்ணெயை இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வது, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கும் வெளியுறவுக் கொள்கைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது எனக் கூறி, அபராத நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில், இந்தியா தனது சுயாதீனமான பொருளாதார, அரசியல் நிலைப்பாட்டை காக்கும் வகையில் பேச்சுவார்த்தையை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.