துல்கர் சல்மான் தயாரிப்பில் ‘லோகா அத்தியாயம் 1: சந்திரா’ படம் வெளியாகியுள்ளது. இதில் கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். ‘பிரேமலு’ நஸ்லன், சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலச்சந்திரன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜேக்ஸ் பீஜாய் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படம் மோகன்லால் நடித்த ‘ஹ்ருதய பூர்வம்’ மற்றும் ஃபஹத் பாசில் நடித்த ‘ஓடும் குதிர சாடும் குதிர’ படங்களுடன் வெளியிடப்பட்டது. ஆனால் ‘லோகா’ மற்ற இரண்டு படங்களை விட பொதுமக்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாளில் 250 திரையரங்குகளில் வெளியான ‘லோகா’, அடுத்த நாளிலிருந்து 325 திரையரங்குகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் படத்திற்கான திரைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் படம் 5 நாட்களில் ரூ.81 கோடியை தாண்டியுள்ளது. திங்கட்கிழமை நிலவரப்படி, இந்தியா முழுவதும் ரூ.31 கோடி வசூலித்துள்ளது.
இதே நிலை தொடர்ந்தால், நாளை படம் ரூ.100 கோடியை தாண்டும் என்று சினிமா நிபுணர்கள் கூறுகின்றனர். நிவின் பாலியின் ‘பிரேமம்’ மற்றும் மம்முட்டியின் ‘டர்போ’ போன்ற மலையாளப் படங்களின் சாதனைகளையும் இந்தப் படம் முறியடித்துள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.30 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.