சிறந்த நிறம், தனித்துவமான அமைப்பு, இனிப்பு சுவை – இவை மட்டுமல்லாமல் டிராகன் பழம் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த ஒரு சத்தான பழம். ஒரு டிராகன் பழம் சாப்பிடுவதால் தினசரி வைட்டமின் சி தேவையை பூர்த்தி செய்ய முடியும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, சரும ஆரோக்கியமும் மேம்படும்.

டிராகன் பழத்தில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல், வீக்கம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. மேலும், இது குறைந்த கலோரி கொண்டதால் எடையை குறைக்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாகும். நார்ச்சத்து நிறைவான உணர்வை நீண்ட நேரம் தருவதால் இடைவேளை சிற்றுண்டி ஆசையை கட்டுப்படுத்துகிறது.
இதய ஆரோக்கியத்திலும் டிராகன் பழம் தனிச் சிறப்பு வாய்ந்தது. இதில் உள்ள ஓமேகா-3, ஓமேகா-9 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள், இதயத்தில் வீக்கம் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன. இதனால் ஹார்ட் அட்டாக் ஏற்படும் அபாயம் குறைகிறது.
சரும ஆரோக்கியத்தைப் பற்றி சொல்வதற்கே தேவையில்லை. டிராகன் பழத்தில் உள்ள வைட்டமின் சி, புற ஊதா கதிர்களின் சேதத்திலிருந்து சருமத்தை காக்கிறது. சுருக்கங்கள் மற்றும் முதிர்வு அறிகுறிகளை தாமதப்படுத்தி, இளமை மற்றும் பொலிவான தோற்றத்தை வழங்குகிறது.
எனவே, உங்கள் உணவில் டிராகன் பழத்தைச் சேர்ப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு எளிய வழி. நோய் எதிர்ப்பு சக்தி முதல் இதய ஆரோக்கியம் வரை, பல நன்மைகளை தரும் இயற்கையின் சிறந்த பரிசாக இதை கருதலாம்.