சென்னை: இந்தியர்களின் வாழ்க்கையில் தங்கம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. திருமணம், விழாக்கள், சேமிப்பு முதலிய அனைத்திலும் தங்கம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சமீப மாதங்களில் தங்க விலை வரலாறு காணாத உயர்வை எட்டியிருந்த நிலையில், இன்று சிறிய அளவில் விலை குறைந்துள்ளது.

செப்டம்பர் மாத தொடக்கம் முதலே தினசரி உயர்ந்து வந்த தங்கம் விலை, நேற்று (செப். 3) ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.9,805-க்கும், ஒரு சவரன் ரூ.78,440-க்கும் விற்கப்பட்டது. ஆனால் இன்று (செப். 4) சிறிய குறைவுடன் விற்பனை நடைபெற்று வருகிறது.
22 காரட் தங்கம் இன்று ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.9,795-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.78,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.8,110-க்கும், ஒரு சவரன் ரூ.40 குறைந்து ரூ.64,880-க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.137-க்கும், ஒரு கிலோ ரூ.1,37,000-க்கும் விற்பனை நடைபெறுகிறது. தங்க விலையில் ஏற்பட்ட குறைவு, நகை பிரியர்களுக்கு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.