புது டெல்லி: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் செப்டம்பர் 30-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கும். 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடருக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.122.50 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.39.95 கோடி வழங்கப்படும். இந்த நிலையில், இந்தத் தொடரில் இந்தியாவில் நடைபெறும் லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விலையை ஐசிசி அறிவித்துள்ளது. எந்தத் தொடருக்கும் இல்லாத வகையில் முதல் கட்ட விற்பனையில் டிக்கெட்டுகளின் விலையை ஐசிசி ரூ.100 என நிர்ணயித்துள்ளது.

டிக்கெட் விற்பனை வரும் 9-ம் தேதி தொடங்கும். இரண்டாம் கட்ட விற்பனையில் டிக்கெட்டுகளைப் பெற விரும்பும் ரசிகர்கள் அதே நாளில் பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி தொடக்க விழாவில் நடைபெறும்.