சென்னை: கொளத்தூர் தொகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.
மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் எம்.மகேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் கொளத்தூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைகள், மழைநீர் வடிகால், பள்ளிக் கட்டடங்கள் உள்ளிட்டவை துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, சி.எம்.டி.ஏ., சென்னை குடிநீர் வாரியம், நகர்ப்புற வளர்ச்சி வாரிய அமைச்சர் சேகர்பாபு, கட்டடங்கள், பஸ் ஸ்டாண்ட், மருத்துவமனை, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகள், வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், மின் கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை: அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்கவும், தொகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மின்சார வாரிய முதன்மை நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் காகர்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, நகராட்சி ஆணையர் ஜே. குமரகுருபரன் சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் டி.ஜி.வினய், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக இயக்குநர் எஸ்.பிரபாகர், சென்னை மாவட்ட ஆட்சியர். ரஷ்மி சித்தார்த் ஜெகடே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.