புதுடெல்லி:எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, ஜூலை 29-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய “சக்ரவியூ” உரைக்கு பதிலளிக்கும் வகையில், அமலாக்க இயக்குனரகம் (ED) தன் மீது சோதனை நடத்தத் தயாராகி வருவதாகக் கூறினார்.
தனக்கு எதிராக அமலாக்கத்துறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: சமீபத்தில் நடந்த பார்லி கூட்டத்தில் பட்ஜெட் குறித்து விமர்சித்து பேசினேன்.
இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பான திட்டங்கள் எதுவும் இல்லை என்பதையும் நான் சுட்டிக்காட்டினேன். இது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் என்னிடம் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்த முயற்சிப்பதாக தகவல் வருகிறது. நான் உங்களை இருகரம் நீட்டி வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆனால் இதை பாஜக மறுத்துள்ளது. இது ஆதாரமற்றது என்றும் கூறியுள்ளது.