டெல்லி: ஜிஎஸ்டி மறுசீரமைப்பைத் தொடர்ந்து, கார்களின் விலைகள் 22-ம் தேதி முதல் குறைக்கப்படும், மேலும் ஒவ்வொரு காரின் விலையும் எவ்வளவு குறைக்கப்படும் என்ற பட்டியலை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது. அதன்படி, விலை அதிகபட்சமாக ரூ.1.40 லட்சம் குறைக்கப்படும்.
டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு, கார்களுக்கான வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பெரிய கார்களுக்கான ஜிஎஸ்டி 40 சதவீதமாக திருத்தப்பட்டுள்ளது.

வரி குறைப்பு வரும் 22-ம் தேதி அமலுக்கு வரும்போது அதன் நிறுவன கார்களின் விலை எவ்வளவு குறைக்கப்படும் என்ற பட்டியலை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது.
அவற்றில், கிராண்ட் ஐ10 நியாஸ் – ரூ.73,808, ஐ20 விலை ரூ.98,053, ஐ20 என்-லைன் விலை ரூ.1,08,116, ஆரா கார் விலை ரூ.78,465, வெர்னா விலை ரூ.60,640, எக்ஸ்டர் ரூ.89,209, வென்யூ-ரூ.1,23,659 வென்யூ என்-லைன் ரூ.1,19,390, கிரெட்டா – ரூ.72,145, கிரெட்டா என்-லைன் விலை ரூ.71,762 குறைக்கப்பட்டுள்ளது. டஸ்கன் காரின் விலை ரூ.2,40,303 குறைக்கப்படுவதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.