கீவ்: உக்ரைன் போரில் ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து, அதற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் அவர், “ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு உக்ரைனுக்கு வலியை ஏற்படுத்துகிறது. புடின் உலகத்தை சோதிக்கிறார். அவர் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை” என்று கூறியுள்ளார். மேலும், ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா மற்றும் அதனுடன் தொடர்புடைய தனிநபர்களுக்கு எதிராக கூடுதல் வரிகள், பொருளாதார தடைகள் விதிக்கப்பட வேண்டும் என ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார். “புடின் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை. எனவே சர்வதேச சமூகம் பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்” என்றார்.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டிரம்பும், “உக்ரைனில் நடைபெறும் ரஷ்ய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, கூடுதல் தடைகள் விதிக்கத் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். இந்த சூழலில், ஜெலன்ஸ்கியின் கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.