சேலம்: சாலையோரம் கடைகள் வைத்துள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம் மாவட்ட தெரு வியாபார தொழிலாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். இதில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தொடர்ந்து மனுக் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத சேலம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100- க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டனர்.