ரேபரேலி: உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரங்களை நாங்கள் வெளியிட்டுள்ளோம். வரும் நாட்களில் இன்னும் மோசமான ஆதாரங்களை வெளியிடுவேன்.

“வாக்குகளைத் திருடியவர்கள் அரியணையை விட்டு வெளியேறுங்கள்” என்ற முழக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. மோசடி மூலம் அரசாங்கங்கள் உருவாகின்றன என்பது உண்மைதான்.
இதற்கான ஆதாரங்களை நாங்கள் வழங்குவோம். அந்த ஹைட்ரஜன் குண்டு வெடிக்கும்போது, அனைத்தும் சுத்தமாகிவிடும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.