டாக்கா: வேலை ஒதுக்கீட்டில் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், கடந்த மாதம் நடந்த வன்முறை ஆர்ப்பாட்டங்களில் 200க்கும் மேற்பட்டோருக்கு நீதி கோரி, பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பங்களாதேஷில் அதிகமான போராட்டங்கள் நடந்து வருகின்றன .
வங்கதேசத்தில் மீண்டும் மாணவர் போராட்டம் குறித்த வதந்தி பரவி வருவதால் வன்முறை சம்பவங்களை தவிர்க்க சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. 1971ல் பாகிஸ்தான் ராணுவத்துடன் போரிட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்து 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ராணுவம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.
இதையடுத்து, ஜூலை 18ம் தேதி நாடு முழுவதும் சமூக வலைதளங்கள் தடை செய்யப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டன. இந்நிலையில், மீண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக வதந்தி பரவியதால், வங்கதேச அரசு இன்று (02.08.2024) வெளியிட்டுள்ள உத்தரவில், டெலிகிராம், பேஸ்புக், யூடியூப், வாட்ஸ்அப், எக்ஸ், டிக்டாக்,. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.