துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். உலகின் உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலீஃபாவை தன் மண்ணில் கொண்டுள்ள இந்த நகரம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வானளாவிய கட்டடங்கள், ஆடம்பரமான வாழ்க்கை முறை, பாலைவன சஃபாரிகள், கடற்கரைகள் மற்றும் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால்களால் பிரபலமாக உள்ளது. இந்தியர்களும் பெருமளவில் துபாய் சுற்றுலா செல்கின்றனர்.

ஆனால், இந்திய ரூபாயின் மதிப்பு துபாயில் எவ்வளவு என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? துபாய் மற்றும் அமீரகத்தின் அதிகாரப்பூர்வ நாணயம் திர்ஹாம் (AED) ஆகும். செப்டம்பர் 15, 2025 நிலவரப்படி, 1 இந்திய ரூபாய் சுமார் 0.042 திர்ஹாம் ஆகும். அதாவது 100 இந்திய ரூபாய் துபாயில் 4.16 திர்ஹாம் மதிப்பைக் கொண்டுள்ளது. மாறாக, 100 திர்ஹாம் இந்திய மதிப்பில் ரூ.2403 ஆகும். எனவே, பயணத்திற்கு முன் நாணய மாற்று விகிதத்தை சரிபார்த்துக் கொள்வது அவசியம்.
துபாயில் சுற்றுலா செலவு நபர் தோறும் மாறுபடும். பொதுவாக ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு AED 300 முதல் AED 2000 வரை செலவாகும். இரண்டு பேருக்கு AED 800 முதல் AED 5000 வரை செலவாகும். தங்குமிடத்திலும் வித்தியாசம் உண்டு. சாதாரண ஹோட்டல்களில் தங்கினால் ஒரு நபருக்கு சுமார் AED 200 செலவாகும். ஆனால் ஆடம்பர ஹோட்டல்களில் தங்க விரும்பினால் அது ஒரு நாளைக்கு AED 2500 வரை போகலாம்.
அதேபோல, அன்றாட போக்குவரத்து செலவுகளும் வாழ்க்கை முறையின்படி மாறும். டாக்ஸி, பேருந்து, மெட்ரோ ஆகியவற்றில் தேர்வு செய்வதைப் பொறுத்து தினசரி AED 30 முதல் AED 150 வரை போக்குவரத்து செலவாகலாம். எனவே, துபாய் செல்லும் முன் உங்கள் பட்ஜெட்டை திட்டமிட்டு செலவுகளை கவனமாக நிர்ணயிப்பது சிறந்தது.