தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், இன்று (செப்டம்பர் 17) சிறிய அளவிலான குறைவு பதிவாகியுள்ளது. இதனால் நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளது.
நேற்று (செப்டம்பர் 16) ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.10,280க்கும், ஒரு சவரன் ரூ.82,240க்கும் விற்பனையானது. ஆனால் இன்று விலை குறைந்து, 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.10,270க்கும், ஒரு சவரன் ரூ.82,160க்கும் விற்பனையாகிறது. அதேபோல் 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,510க்கும், ஒரு சவரன் ரூ.68,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.142க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,42,000க்கும் விற்பனையாகிறது. விலை குறைந்துள்ளதால், தங்கம் மற்றும் வெள்ளி வாங்க ஆர்வமாக காத்திருந்தவர்களுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக இருக்கிறது.
முன்னதாக கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 1200% வரை உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய குறைவு தற்காலிகமா அல்லது நிலையான மாற்றமா என்பதில் அனைவரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.