டெல்லி: ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய கட்டண மாற்றம் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், இது தொடர்பாக UIDAI இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் முகவரி மாற்ற சேவைக்கான கட்டணம் தற்போதைய ரூ. 50 இல் இருந்து ரூ. 75 ஆக உயர்த்தப்படுகிறது. ஆதாரில் புகைப்பட மாற்றம் உள்ளிட்ட பிற சேவைகளுக்கான கட்டணம் ரூ. 100-ல் இருந்து ரூ. 125 ஆக உயர்த்தப்படுகிறது.

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாகப் பயன்படுத்தப்படும் ஆதார் அட்டையின் சேவைகள், வங்கி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
எனவே, கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் மக்களை நேரடியாகப் பாதிக்கலாம் என்றாலும், இந்த உயர்வு மிகக் குறைவுதான் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.