பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூரில் உள்ள சஞ்சீவிராயர் மலைக்கோயிலில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று, பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தின் ஐந்து சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அதேபோல், இன்று, புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று, பாடாலூரில் உள்ள சஞ்சீவிராயர் மலைக்கோயிலிலும், மலை அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும் பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில், பால், பன்னீர், சந்தனம், குங்குமம், விபூதி உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது.
உணவு விநியோகம் செய்யப்பட்டது. இதில், பாடாலூர் திருவளக்குறிச்சி, இரூர், பெருமாள்பாளையம், சீதேவிமங்கலம், ஆலத்தூர்கேட், நாட்டார்மங்கலம், நாரணமங்கலம், விஜயகோபாலபுரம், காரை, செட்டிகுளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்தனர்.