வாஷிங்டன்: உலக நாடுகளில் அமைதி நிலை நிறுத்துவதற்கு என்னைப் போல பாடுபட்டவர் யாரும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமையாக தெரிவித்துள்ளார். உலக அரங்கில் தனது பங்கு மிகப்பெரியது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டம் செப்டம்பர் 23 முதல் 29 வரை நடைபெறுகிறது. அதில் உரையாற்ற உள்ள டிரம்ப், வெள்ளை மாளிகையில் நிருபர்களை சந்தித்தபோது, “உலக அமைதியே என் இலக்கு. கடந்த எட்டு மாதங்களில் ஏழு முக்கிய பிரச்சினைகளை தீர்த்து வைத்தேன்” என்று கூறினார்.
ஈரானில் அணுசக்தி நிலையங்களை பி-2 போர் விமானங்கள் மூலம் அழித்தது, பெரும் அழிவைத் தடுத்தது எனவும், ரஷ்யா-உக்ரைன் போருக்குத் தீர்வு காண சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவுகணைகள் செலுத்தி பெரிய போரைத் தடுத்ததாகவும் பெருமை கொண்டார்.
“உலகம் முழுவதும் அமைதியை நிலைநிறுத்த நான் செய்த முயற்சிகளை விட சிறந்தவை யாராலும் செய்யப்படவில்லை” என தம்பட்டம் அடித்த டிரம்ப், வரவிருக்கும் ஐநா கூட்டத்தில் தனது நிலைப்பாட்டை உலகிற்கு வெளிப்படுத்த உள்ளார்.