மலையாளத்தில் ‘பல்டி’ படத்தில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் ஷேன் நிகம் இணைந்து நடிக்கின்றனர். விளையாட்டு பின்னணியில் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்குகிறார். ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்கிறார்.
இதை எஸ்டிகே பிரேம்ஸ் மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் தயாரித்துள்ளனர். பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உடனிருந்தனர். நடிகர் சாந்தனு கூறுகையில், “15 வருடங்களுக்குப் பிறகு நான் மீண்டும் மலையாள சினிமாவில் இணைகிறேன்.

‘பல்டி’ என்பது 4 இளைஞர்களைப் பற்றிய கதை. ஷேனாக நடிக்க மலையாளத்திலோ அல்லது தமிழிலோ வேறு யாரையாவது தேர்வு செய்திருக்கலாம். ஆனால் இதுபோன்ற ஒரு கதையில் இவ்வளவு அற்புதமான வேடத்தை எனக்கு வழங்கியதற்கு நன்றி. இந்தப் படம் மலையாளத்தில் எனது மறுபிரவேசமாக இருக்கும்.
கபடி அணியில் ஒருவர் காணாமல் போனால் என்ன நடக்கும் என்பதுதான் கதை. நாங்கள் 3 மாதங்கள் கபடிக்காக பயிற்சி பெற்று நடித்தோம். ஷேனிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். நானே மலையாளத்தில் டப்பிங் செய்தேன். 3 நாட்களில் முடித்துவிட்டேன்.”