புது டெல்லி: ஜிஎஸ்டியில் முக்கிய மாற்றங்கள் நாளை அமலுக்கு வரும். நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பு 4 வரி விகிதங்களாக இருந்த ஜிஎஸ்டி, 5% மற்றும் 18% என 2 விகிதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான அன்றாடத் தேவைகள் 5 சதவீதத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தவிர, பல உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆடம்பர மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு 40% சிறப்பு வரி விகிதம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் நாளை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும். இது தொடர்பாக, திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் செயல்படுத்தல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க, மத்திய நுகர்வோர் விவகாரத் துறை நேற்று INGRAM என்ற புதிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது.
இதில், புதிய ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை பொதுமக்கள் பதிவு செய்யலாம்.