‘த்ரிஷ்யம்’ என்பது மோகன்லால், மீனா, ஆஷா சரத், எஸ்தர் அனில் மற்றும் பலர் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான மலையாளப் படம். ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழில், கமல்ஹாசன் மற்றும் கௌதமி நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘த்ரிஷ்யம் 2’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து, ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக இயக்குனர் ஜீத்து ஜோசப் மற்றும் மோகன்லால் அறிவித்தனர். இந்த சூழ்நிலையில், ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு நேற்று கொச்சியின் புறநகர்ப் பகுதியில் பூஜையுடன் தொடங்கியது.
மோகன்லால், ஜீத்து ஜோசப், தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். படப்பிடிப்பை 55 நாட்களில் முடிக்க திட்டமிட்டனர்.