நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்தியாவை அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக குறிப்பிட்டனார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் காரணத்தினாலேயே அதிபர் ட்ரம்ப் கூடுதல் வரி விதித்தார் என்று அவர் கூறினார்.

உக்ரைன் தொடர்பான ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில், ட்ரம்ப் உலக அமைதியை மீட்டெடுக்க கவனம் செலுத்தியவர் என்றும், பல இடங்களில் அதனால் வெற்றி கிடைத்துள்ளதாகவும் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதிலும் ட்ரம்ப் முக்கிய பங்கு வகித்தார்.
மார்கோ ரூபியோ கூறியதாவது, தாய்லாந்து, கம்போடியா, காங்கோ, ருவாண்டா, அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா போன்ற பல இடங்களில் மோதல்களை தீர்ப்பதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்துள்ளது. இதேபோல், உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் பெரிய சவால் இருந்தாலும், அதில் அமெரிக்கா அயராது செயல்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் மிக அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.