நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் எச்1பி விசாவில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக பயன்படுத்தும் எச்1பி விசாவில் இந்தியா முன்னணி நாடாக இருக்கிறது.
சமீபத்தில் இந்த விசாவின் கட்டணத்தை 88 லட்சம் ரூபாயாக உயர்த்திய பின்னர், அமெரிக்க அரசு புதிய உத்தரவை வெளியிட்டது. புதிய உத்தரவின் படி, முன்னைய லாட்டரி முறையை நிறுத்தி, திறமை மற்றும் ஊதியத்தின் அடிப்படையில் விசாக்களை வழங்கும் புதிய தேர்வு முறை அமல்படுத்தப்படுகிறது.

இந்த புதிய முறை மூலம், விண்ணப்பங்களின் எண்ணிக்கை 85,000 ஐ கடந்தால், அதிக ஊதியம் தரும் நிறுவனங்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதாவது திறமையுடனும் அதிக ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.
இந்த மாற்றத்தின் மூலம், அதிக திறமை கொண்டவர்கள் மட்டுமே எச்1பி விசாவை பெற வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.