சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து சாதனை அளவை தொட்டு வருகிறது. தற்போது ஒரு சவரன் தங்கம் சுமார் ரூ.84,000 – ரூ.85,000 வரையிலுள்ளது. கடந்த சில மாதங்களில் விலை தொடர்ந்து உயர்ந்ததால், “ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சம் எப்போது அடையும்?” என்ற கேள்வி பொதுமக்களில் எழுந்துள்ளது. தங்கம் இந்தியர்களின் வாழ்க்கையில் வெறும் ஆபரணமல்ல, அது நீண்டகால முதலீட்டுக்கும் முக்கியம்.

2015ல் ஒரு சவரன் தங்கம் சுமார் ரூ.24,000 மட்டுமே இருந்தது. அதற்கு பிறகு ஏற்ற இறக்கம் இருந்தாலும், தற்போது சாதனை உச்சத்தை தொட்டுள்ளது. 2020க்கோரோனா காலத்தில், 2022– ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக தங்க விலை அதிகரித்தது. 2024ல் மத்திய வங்கிகள் தங்க கையிருப்பை அதிகரித்ததும், அமெரிக்க வட்டி விகிதங்கள் குறைந்ததும் விலை மேலும் உயர்ச்சியடைந்தது.
சர்வதேச சந்தை நிலவரப்படி, நிபுணர்கள் கணிப்பின்படி 2026 நடுப்பகுதி அல்லது 2027 ஆரம்பத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சம் அடையும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்க பொருளாதாரம் மேலும் சிக்கலில் சிக்கினால், முதலீட்டாளர்கள் பங்கு சந்தையிலிருந்து தங்கத்திற்கு மாற வாய்ப்புள்ளது. இதனால் விலை அதிவேகமாக உயர வாய்ப்பு இருக்கிறது.
தங்கம் வாங்க சிறந்த நேரம் எப்போது என்பது குறித்து நிபுணர்கள் கூறியதாவது, விலை குறையும் வரை காத்திருக்க வேண்டாம். நீண்டகால முதலீட்டில் தங்கம் நஷ்டமளிக்காத சொத்து என்பதால், சிறிய அளவில் முதலீடு செய்யலாம். தீபாவளி மற்றும் திருமண காலங்களில் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதால், தற்போது வாங்குவது நன்மை தரும் எனவும் கூறப்படுகிறது.