சென்னை: திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மட்டும் தொடர்ந்து கொலைகள் நடப்பதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது.
விடிய, திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறிவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. தினசரி கொலைகளால் மக்கள் எப்படி பாதுகாப்பாக உணர முடியும்?
பயமில்லாமல் எப்படி தினமும் வேலைக்குச் செல்வது? நம் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகள் எப்படி வருகிறார்கள்? புதிய தொழில் முதலீடுகள் எப்படி வரும் அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டாமல், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு இபிஎஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.