வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 330க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பணிகளுக்காக பிரபலங்கள் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வருகின்றனர்.
விக்ரம் 20 லட்சமும், ராஷ்மிகா மந்தனா 10 லட்சமும் கொடுத்தனர். சூர்யா, கார்த்தி, ஜோதிகா 50 லட்சம் கொடுத்தனர். நயன்தாரா-விக்னேஷ் சிவன் இணைந்து ரூ.20 லட்சமும், மோகன்லால் ரூ.25 லட்சமும், மம்முட்டி ரூ.20 லட்சமும், துல்கர் சல்மான் ரூ.15 லட்சமும் வழங்கியுள்ளனர்.