சென்னை: கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 39 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 39 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.
காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா 2 லட்ச ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்.
கற்பனைக்கும் எட்டாத வகையில் கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கிறேன். என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். சிகிச்சையில் உள்ள அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் த.வெ.க. உறுதியாகச் செய்யும். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.