ஊட்டி: வயநாடு நிலச்சரிவில் மீட்பு பணிகளில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தேவையான ரூ.7 லட்சம் மதிப்பிலான 12 வகையான நவீன இயந்திர பொருட்கள் நீலகிரி திமுக., சார்பில் வழங்கப்பட்டது.கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன பலரையும் இந்திய ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.