பாரீஸ்:
பாரிஸ் ஒலிம்பிக் 2024: ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தி நோவக் ஜோகோவிச் தனது முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஞாயிற்றுக்கிழமை வென்றார்.
37 வயதான செர்பிய டென்னிஸ் வீரர் ஜோகோவிச் 7-6 (3), 7-6 (2) என்ற நேர்செட் கணக்கில் அல்கராஸை வீழ்த்தினார்.
“நாங்கள் கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் விளையாடினோம், நான் போட்டியில் வெற்றி பெற முடியும் என்பதில் உறுதியாக இருந்த ஒரே தருணம் இறுதி ஷாட்” என்று ஜோகோவிச் கூறியதாக APF தெரிவித்துள்ளது.
இன்று (ஆகஸ்ட் 4) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச்சும், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கார்சும் மோதினர். இதில் 7-6(3), 7-6(2) என்ற செட் கணக்கில் அல்கராசை வீழ்த்தி தங்கம் வென்றார். இதன் மூலம் டென்னிஸில் ஜோகோவிச் முதல் தங்கம் வென்றார்.