கேரளா: புதிய வீடுகள் கட்டித் தர திட்டம்… வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளைக் கட்டித் தருவது குறித்து முதல்வர் பினராயி விஜயன் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வயநாடு முண்டக்கை பகுதியில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளைக் கட்டித் தருவது குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக கேரள அரசு மறுவாழ்வு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. பாதுகாப்பான பகுதியில் ஒரு புதிய டவுன் உருவாக்கப்படும் என்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு அங்கு வீடுகள் வழங்கப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில் இத்திட்டத்தை விளக்கிய பினராயி விஜயன், விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையே எல்.ஐ.சி உள்ளிட்ட பல்வேறு காப்பீடு நிறுவனங்கள் வயநாடு மக்களுக்கு உதவ வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் காப்பீடு கோரினால் உடனடியாக அவர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.