சிலம்பரசன் தற்போது மிகப்பெரிய ப்ராஜெக்டில் நடிக்கவுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகும் STR 49 படத்தைச் சுற்றி ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தின் ப்ரோமோ வீடியோ அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கு முன்பே, சிம்புவிடம் வெற்றிமாறன் முழுக் கதையையும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு தற்போது தாய்லாந்தில் இருப்பதால் வீடியோ கால் மூலமே வெற்றிமாறனின் கதை சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கதை முடிந்ததும் சிம்பு, “வேற லெவல் சார்” என்று வெற்றிமாறனை பாராட்டியதாகவும், படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் ஆகும் என உறுதியாக தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் STR 49 மீது ரசிகர்களின் நம்பிக்கை இன்னும் அதிகரித்துள்ளது.
வடசென்னை உலகை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது என்ற பேச்சு ஏற்கனவே வந்தது. சிம்புவும் வெற்றிமாறனும் இணைவது ரசிகர்களுக்கு நீண்டநாள் கனவாக இருந்தது. கடந்த காலத்தில் வடசென்னை படத்தில் சிம்பு நடிக்க இருந்தாலும் அது சாத்தியமாகவில்லை. இப்போது STR 49 மூலம் அவர்களின் கூட்டணி நிறைவேறி உள்ளது.
தொடர்ந்து மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற ஹிட் படங்களில் கலக்கிய சிம்புவுக்கு, சமீபத்திய தக்லைப் படம் வெற்றி பெறாததால், STR 49 மிகப்பெரிய திருப்புமுனை படமாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். 2026 ஆம் ஆண்டு வெளியாகும் STR 49, அந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றாக அமையும் என ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.