சென்னை: கடந்த சில மாதங்களில் தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை எட்டி வருகிறது. ஆனால் அதனுடன் இணைந்து, வெள்ளி விலை மேலும் அதிகரித்து வருகிறது. ஜனவரி முதல் வெள்ளி விலை ரூ.60,300 அதிகரித்து சுமார் 67.22 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் 31 அன்று கிலோவுக்கு ரூ.89,700 ஆக இருந்தது, இன்று அது ரூ.1,61,000 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய விலை நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளி 161 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,61,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நிலையற்ற சந்தை, அதிகரிக்கும் தேவைகள் மற்றும் வெள்ளியின் தொழிற்சாலை பயன்பாடுகள், சோலார் பேனல்கள், வாகனங்கள் போன்றவற்றில் பயன்பாடு ஆகியவை விலை உயர்விற்கு காரணமாகும்.
நிபுணர்கள் கூறியதாவது, வெள்ளி விலை வரும் காலங்களில் தொடர்ந்தும் உயர வாய்ப்பு உள்ளது. இதனால், தங்கத்தை விட வெள்ளி முதலீடு செய்வதில் அதிக லாபம் கிடைக்கும் என்றும், இடிஎஃப்கள் மற்றும் வெள்ளி நாணயங்களில் முதலீடு செய்ய நல்ல நேரம் எனக் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் வெள்ளி வாங்கும் முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது.