கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் ஜூலை 30ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவினால் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டதாக முதற்கட்ட தகவல் வந்தது.
மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் ஆறாவது நாளாக இன்றும் (04.08.2024) முப்படை வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவை உலுக்கிய நிலச்சரிவில் 357 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், வயநாடு பகுதியில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசு சார்பில் உத்தரவிட்டிருந்தார். மேலும் அந்த உத்தரவில் தமிழக அரசு ரூ. 5 கோடி வழங்கப்படும்.
இதன்பின், தமிழக அரசு சார்பில், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வி. வேலு ரூபாய் காசோலையை வழங்கினார். இந்நிலையில், வயநாடு நிவாரணப் பணிகளுக்காக தமிழகம் சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் நிவாரணப் பணிகளுக்காக, 5 கோடி ரூபாய் வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் ஏ.வி.வேலு மற்றும் தமிழக அரசுக்கு நன்றி. உங்கள் ஆதரவு மற்றும் ஒற்றுமை மிகவும் பாராட்டப்படுகிறது, இந்த நிதி மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு முயற்சிகளை நோக்கி நீண்ட தூரம் செல்லும்,” என்று அவர் கூறினார்.