சமீபத்தில் வெளியாகிய தனுஷ் நடிப்பில் இட்லி கடை திரைப்படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான இரண்டே நாட்களில் வசூலில் அமோக வளர்ச்சி கண்டிருக்கும் இப்படத்திற்கு தற்போது புதிய சிக்கல் எழுந்துள்ளது.
அதாவது, இட்லி கடை படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது. அரசியலுக்குள் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையே உருவாகியிருக்கும் போட்டி, ரசிகர்களிடையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சில விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #BoycottRedGiant என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்டாக்கியுள்ளனர். இந்த ட்ரெண்ட், இட்லி கடை படத்தின் வசூலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் மறுபக்கம், தனுஷின் பெரும் ரசிகர்கள் கூட்டம் இப்படத்திற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதோடு, பாசிட்டிவ் ரிவ்யூவும் குவிந்து வருகிறது. இதனால், ஹாஷ்டேக் பிரச்சாரம் வசூலில் பெரிய தாக்கம் செலுத்தாது என சில வட்டாரங்கள் கூறுகின்றன.
எனினும், அரசியல் மற்றும் சினிமா ரசிகர் மோதல் ஒரே மேடையில் தொடரும் அபாயம் இருப்பதாக திரையுலகில் பேசப்படுகிறது. “படங்களை படமாகவே பார்க்க வேண்டும், அரசியலை இதில் கலக்கக்கூடாது” என்று பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். அடுத்த சில நாட்களில் இட்லி கடை வசூல் நிலைமை இந்த விவாதத்துக்கு தெளிவான பதிலைத் தரும்.