சென்னை: தமிழில் வெளியான அங்காடித்தெரு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மகேஷ். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.
முதல் படம் அங்காடித் தெரு நல்ல வெற்றியை கொடுக்க அடுத்து கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம், வேல்முருகன் போர் வெல்ஸ் ஆகிய படங்களில் நடித்தார், ஆனால் பட வெற்றிபெறவில்லை.
மேலும் மலையாளத்தில் லாஸ்ட் பெஞ்ச் படத்தில் நடித்தார், அதுவும் கைகொடுக்கவில்லை. தமிழ், மலையாளத்தை தாண்டி தெலுங்கிலும் நடித்தார், அதிலும் வெற்றிபெறவில்லை.
எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் 15 வருடங்களை நிறைவு செய்துவிட்டார். தற்போது அவர் தடை அதை உடை என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தற்ோது அவரை பார்த்தால் அங்காடித் தெருவில் நடித்த மகேஷா இது என்ற கேள்விதான் எழுகிறது என்கின்றனர் ரசிகர்கள். அந்தளவிற்கு ஆள் மாற்றம் ஆகி உள்ளார்.