கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 மக்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டை அதிர வைத்தது. இந்தச் சம்பவத்துக்கு இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுடன் பேச விஜய் நேற்று வீடியோ கால் மூலம் ஆறுதல் கூறியுள்ளார்.

மற்ற அனைத்து முக்கிய கட்சியினரும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தனர். ஆனால், தவெக சார்பில் விஜய் நேரடியாக கரூர் சென்று மக்கள் சந்திப்பதற்கான அனுமதி பெறவில்லை. இதனால் அரசியல் விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கிடையில், விஜய் சார்பில் டிஜிபி அலுவலகத்தை நேரடியாக சென்று பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது. தவெக வழக்கறிஞர்அணி, மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவழகன் இந்த மனுவை சமர்ப்பித்தார். இதேபோல் Y பிரிவு தலைமை அலுவலகத்திலும் பாதுகாப்பு கோரி அனுமதி கேட்டுள்ளனர்.
விஜய் வீடியோ கால் மூலம் மக்களுக்கு கூறியதாவது, “எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன். இது ஈடு செய்ய முடியாத இழப்பு. விரைவில் நேரில் வந்து சந்திப்பேன்” என்றார். அதிகாரிகள் அனுமதி வழங்கும் பட்சத்தில் அவர் நேரில் senrrமக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.