செல்வராகவன் இயக்கிய ‘மென்டல் மனதில்’ படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். மாதுரி ஜெயின் கதாநாயகியாக நடிக்கிறார்.
அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.வி. பிரகாஷ் இந்த படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் கீழ் தயாரிக்கிறார். இந்த காதல் படத்தின் பாடல்களைப் பற்றி பேசுகையில், ஜி.வி. பிரகாஷ், “இந்தப் படம் என் மனதிற்கு நெருக்கமானது.

இதில் உள்ள பாடல்கள் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ரசிகர்களுக்கும் இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும்” என்றார். படத்தின் முதல் மூன்று கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
முதல் சிங்கிள் மற்றும் டீசர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.