சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல நடிகை மீனா, குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கி பின்னர் முன்னணி ஹீரோயினாக மாறியவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர், தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்துள்ளார்.

அவரது மகள் நைனிகா, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த “தெறி” படத்தின் மூலம் சிறுவர் நட்சத்திரமாக அறிமுகமானார். அந்த படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த அவர், தனது அழகான முகபாவனைகளாலும் மழலை குரலாலும் ரசிகர்களை கவர்ந்தார். ‘தெறி பேபி’ என்று அனைவரும் அன்பாக அழைத்த அந்த குட்டி இப்போது பெரியவளாக மாறியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
மீனாவின் கணவர் மறைவுக்குப் பிறகு, நைனிகா தன் அம்மாவோடு நெருக்கமாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. அந்த போட்டோக்களில் ஹாஃப் ஒயிட் டிரெஸ்ஸில் பிரின்சஸ் போல தோன்றும் நைனிகா, அம்மா மீனாவின் அருகில் நின்று புன்னகையுடன் போஸ் கொடுத்துள்ளார். “அம்மாவை போலவே அழகாக இருக்கிறார்” என்று ரசிகர்கள் கமெண்ட்டுகள் எழுதுகின்றனர்.
சினிமா ரசிகர்கள், “நைனிகா மீண்டும் நடிக்க வருவாரா?” என்ற ஆர்வத்தில் உள்ளனர். அதே நேரத்தில், அவர் படிப்பிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எதிர்காலத்தில் மீனாவைப் போலவே தமிழ் திரையுலகில் ஒரு திறமையான நடிகையாக நைனிகா உருவெடுப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்குகின்றனர்.