காட்டுமன்னார்கோவில்: கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் மணல் திட்டில் சிக்கிக்கொண்ட 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே, கொள்ளிடம் ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டுக்கு பைக்கில் சென்று கூட்டுக் குடிநீர் திட்ட மோட்டாரில் பழுதுநீக்கம் செய்த 3 பேர் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திரும்பி வர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகில் சென்று மூவரையும் மீட்டு வந்தனர். கன மழை காரணமாகவும், கீழணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.