சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் தண்டவாள மேம்பாட்டுப் பணிகளினால், தெற்கு ரயில்வே சில ரயில் சேவைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், சென்னை எழும்பூர் – திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில் சேவைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளால், அந்தோத்யா முன்பதிவில்லா ரயில் சேவை ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், நாகர்கோவில் – தாம்பரம் ரயில் சேவையும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. வைகை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டில் இருந்து எழும்பூர் ஸ்டேஷனுக்கு பதிலாக மதுரைக்கு இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால், தென் மாவட்ட பயணிகள் செங்கல்பட்டிலிருந்து கிளாம்பாக்கம் அல்லது எழும்பூர் வரை மின்சார ரயிலில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
மேலும், அகஸ்ட் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் திருநெல்வேலி – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை எழும்பூர் – திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஆகியவை, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதிலாக செங்கல்பட்டு ரயில் நிலையம் மூலம் இயக்கப்படும். கன்னியாகுமரியில் இருந்து ஆகஸ்ட் 14-ஆம் தேதியில் புறப்படும்.
தொடர்ந்து, டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ், விழுப்புரம், வேலூர், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக திருப்பி விடப்படும். ரயில் பயணிகள், மேற்கொண்டு உள்ள தகவல்களைப் பார்த்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.