புதுடில்லி: இன்று பிரதமர் மோடியை இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் சந்திக்க உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் இந்திய வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.
இந்நிலையில், இந்திய மகளிர் அணி வீராங்கனைகள். இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற உள்ளனர். இதற்காக டெல்லி விமான நிலையம் வந்த இந்திய வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.