சென்னை: சென்னை அறிவாலயத்தில் உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில் சட்டசபை தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்களுக்கு முக்கிய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘உடன் பிறப்பே வா’ நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையின்போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு ஆகியவை தொடர்பாக அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.