சென்னை : விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி பிக் பாஸ் வீட்டின் உள்ளே சென்றுள்ளார். சூர்யா சேதுபதி ‘நடுசென்டர்’ என்ற இணையத் தொடரில் நடித்துள்ளார். ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் இந்த வெப் தொடரில் சூர்யா சேதுபதியுடன் இணைந்து 10 பேர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பிரமோஷன் ஆக அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று உள்ளார்.
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி 7 வாரங்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. சமூக வலைதள போட்டியாளர்கள் அதிகம் காணப்பட்ட இந்நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் வெளியேறினார்.
பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு எண்ட்ரி கொடுத்த அமித், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கிழித்து தொங்கவிடப்போகிறோம் என்று சொல்லிக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள். ஆனால், தாங்கள் வந்த காரணத்தை மறந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் பார்வதியுடன் சேர்ந்து கொண்டு யாரை நாமினேஷன் செய்யலாம், அடுத்ததாக என்ன செய்யலாம் என்று குரூபிசம் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், பிரஜின் – சாண்ட்ரா இருவரும் தம்பதிகளாக விளையாடுவதால் ஒருவர் உடைந்தாலும் ஆறுதல் கூறுவதற்கு மற்றொருவர் இருப்பார்கள்.
அதனால், அவர்களை கண்டிப்பாக போட்டியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சக போட்டியாளர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் புரொமோஷனுக்காக பல திரைப்பிரபலங்கள் உள்ளே செல்வார்கள். சமீபத்தில் பாடகர் மனோ தன் படத்தின் புரொமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டிற்கு சென்றார். தற்போது அந்த வரிசையில் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி உள்ளே சென்றுள்ளார். சூர்யா சேதுபதி ‘நடுசென்டர்’ என்ற இணையத் தொடரில் நடித்துள்ளார். ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் இந்த வெப் தொடரில் சூர்யா சேதுபதியுடன் இணைந்து 10 பேர் நடித்துள்ளனர்.
கூடைப்பந்து விளையாட்டு களத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த தொடரில் சகிக்குமார், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் நரு நாராயணன் இயக்கியுள்ள இந்த வெப் தொடருக்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், ‘நடுசென்டர்’ வெப் தொடர் புரொமோஷனுக்காக படக்குழுவினர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
சூர்யா சேதுபதி, முகேஷ், டோம், யஷ்வந்த், சஹானா, மதுவசந்த், ஆஷா சரத் உள்ளிட்டோர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில் அவரது மகன் சூர்யா சேதுபதி புரொமோஷனுக்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.