சென்னை: நியூரோமைலிடிஸ் ஆப்டிகா என்பது ஒரு தன்னுடல் தாக்க பாதிப்பாகும். இது பார்வை நரம்புகள் மற்றும் நம்முடைய தண்டுவடத்தை தாக்குகிறது. இந்த நரம்பு பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் பார்வை இழப்பு மற்றும் உணர்வில் மாற்றங்களை பெறுகின்றனர்.
இந்த பாதிப்பின் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் பாதிப்புகளை நாம் குறைக்க முடியும். இந்த நரம்பு பாதிப்பு சில நேரங்களில் மூளையையும் தாக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலை டெவிஸ் நோய் அல்லது நியூரோமைலிடிஸ் ஆப்டிகா ஸ்பெக்ட்ரம் என அழைக்கப்படுகிறது.
கண்களில் வலி, கை மற்றும் கால்களில் பலவீனம் முதல் முடக்கம் வரை ஏற்படலாம். இது எந்த வயதினரையும் பாதிக்கும் நரம்பு கோளாறு ஆகும். இருப்பினும் இது ஆண்களை விட பெண்களை அதிகளவில் பாதிக்கிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நோயின் அறிகுறிகள் என்னென்ன மற்றும் அதன் பாதிப்புகள் என்னென்ன என அறிந்து கொள்வோம். நியூரோ என்பது தண்டு வடத்தில் ஏற்படும் அழற்சியையும், மைலிடிஸ் என்பது பார்வை நரம்பு அழற்சியையும் குறிக்கிறது. பார்வை நரம்பு அழற்சி என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கண்களில் ஏற்படலாம்.கண்ணுக்கு பின்னும் மற்றும் கண்களை நகற்றும் போது வலி உண்டாதல்.
நிறங்கள் மங்கிப் போய் மங்கலாக தோன்றுதல், விளக்குகளை அணைத்த பிறகு தோன்றும் மங்கலான உணர்வுஇந்த நோயால் பாதிக்கப்பட்டவர் சோர்வாக இருக்கும் போது கூடுதல் அறிகுறிகளை பெறுகின்றனர்.சோர்வு, தசை பலவீனம், உணர்வின்மை, கூச்ச உணர்வு, கழுத்து, முதுகில் வலி தோன்றுதல் அறிகுறிகள் தென்பட்டாலும் உடனே சிகிச்சையை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.